
முகத்தில் தேன் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இயற்கையான பொலிவு: தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பாதிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கிறது. மேலும், இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்துச் சருமத்தை இறுக்கமாக்கி, இளமையான மற்றும் பிரகாசமான தோற்றத்தைத் தருகிறது.
வறண்ட சருமத்திற்குத் தீர்வு: வறண்ட சருமம் உள்ளவர்களுக்குத் தேன் ஒரு சிறந்த வரப்பிரசாதம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை] பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்ற உதவுகிறது.
முகப்பரு தடுப்பு: தேன் சருமத்தில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டது. இதனால் முகப்பருக்கள் உருளாவதைத் தடுத்து, முகப்பரு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குச் சிறந்த தீர்வாக அமைகிறது.
பக்க விளைவுகள் அற்றது: தேன் இயற்கையான பொருள் என்பதால், இது பொதுவாகச் சருமத்திற்கு எந்தவிதத் தீங்கையும் விளைவிப்பதில்லை. ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகுக்கும் இது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
ஒவ்வாமை உள்ளவர்கள் கவனம்: தேன் ஒவ்வாமை (Allergy) உள்ளவர்கள் இதை முகத்தில் தடவினால் சருமத்தில் எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படக்கூடும். எனவே, அவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
மருத்துவர் ஆலோசனை அவசியம்: கடுமையான முகப்பருக்கள், தடிப்புகள் (Eczema) அல்லது தீவிரமான தோல் நோய்கள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் தேனை நேரடியாக முகத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments