Ticker

6/recent/ticker-posts

குழந்தைகளுக்கான இருமல் மருந்து எப்போது ஆபத்தாக மாறும்..? பெற்றோர்களே உஷார்..!


இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை மருத்துவர்கள், குழந்தைகளுக்கு இருமல் சிரப்களை அதிகமாகப் பயன்படுத்துவது அல்லது தவறாகப் பயன்படுத்துவது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், சில சமயங்களில் அது விஷமாக கூட மாறக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

குழந்தையின் இருமல் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தலாம், எனவே அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது இருமல் சிரப் தான். இருப்பினும், சிரப்கள் எடுத்துக் கொள்வது எப்பொழுதும் ஒரு சிறந்த தீர்வாக இருக்காது, ஏனெனில் அதை அதிகமாகப் பயன்படுத்தினால் நன்மையை விட அதிகமாக தீங்கு விளைவிக்கும். இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை மருத்துவர்கள், குழந்தைகளுக்கு இருமல் சிரப்களை அதிகமாகப் பயன்படுத்துவது அல்லது தவறாகப் பயன்படுத்துவது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், சில சமயங்களில் அது விஷமாக கூட மாறக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். இருமலுக்கான காரணத்தைக் கண்டறிவது, வீட்டிலேயே இயற்கை வைத்தியம் எடுத்துக் கொள்வது மற்றும் மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

1. அனைத்து வகையான இருமலுக்கும் மருந்து தேவையில்லை:குழந்தைகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான இருமல், சளி அல்லது காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது. இவை தானாகவே விரைவில் குணமாகிவிடும் அல்லது 1 அல்லது 2 வாரங்களுக்குள் குணமாகிவிடும். பொதுவாக சிரப்களானது அறிகுறியை மட்டுமே மறைக்கின்றன, காரணத்தை அல்ல. எனவே பெற்றோர் அவற்றை மட்டுமே நம்பியிருப்பது நோயின் உண்மையான காரணத்தை கண்டறிவதில் தாமத்தை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக இருமலானது ஆஸ்துமா, ஒவ்வாமை அல்லது மார்பில் ஏற்படும் கடுமையான தொற்று காரணமாக கூட ஏற்பட்டிருக்கலாம்.

2. அதிகப்படியான அளவு ஆபத்தை ஏற்படுத்தும்:பெரும்பாலான இருமல் மருந்துகளில் இரத்தக் கொதிப்பு நீக்கிகள், ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் கோடீன்  ஆகியவற்றின் கலவைகள் உள்ளன. எனவே இதனை அதிகமாக எடுத்துக் கொள்வது மயக்கம், தலைச்சுற்றல், படபடப்பு, குமட்டல், மூச்சுத் திணறல் அல்லது வலிப்புக்கு வழிவகுக்கும். குழந்தையின் வளர்சிதை மாற்றம் மருந்துகளுக்கு அதிக உணர்திறன் கொண்டது, எனவே லேசான அதிகப்படியான அளவுகள் கூட ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பெற்றோர்கள் இருமல் விரைவாக குணமடையும் என்ற நம்பிக்கையில் அதிகப்படியான அளவை கொடுக்கக்கூடாது.

3. அதிகப்படியான மருந்துகள் நீண்ட கால விளைவை ஏற்படுத்தும்:பெரியவர்களைப் போலல்லாமல், குழந்தைகளின் சிறுநீரகங்களும், கல்லீரல்களும் இன்னும் முதிர்ச்சியடைந்து வருகின்றன. அதாவது மருந்துகள் அவர்களின் உடலில் நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் அதிக விளைவை ஏற்படுத்தும். மேலோட்டமாக பார்ப்பதற்கு தீங்கற்றதாகத் தோன்றும் ஒரு டோஸ், அடிக்கடி கொடுக்கப்பட்டால் அது உடலில் குவிந்து நச்சுத்தன்மையுடையதாக மாறும். அதனால்தான் மருத்துவர்கள் குழந்தைகளின் எடை அடிப்படையிலான அளவை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

4. இயற்கை மற்றும் பாதுகாப்பான விருப்பங்கள்:(1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு) தேன் கொடுப்பது தொண்டையை அமைதிப்படுத்துவதோடு, இரவு நேர இருமலைக் குறைக்கவும் உதவுகிறதுசூடான லிக்விட்கள், சூப்கள் மற்றும் மூலிகை டீ ஆகியவை தொண்டையை அமைதிப்படுத்துவதோடு, எரிச்சலைத் தணிக்க உதவுகிறது.நீராவி பிடிப்பது அல்லது சால்ட் வாட்டர் நாசில் ட்ராப்ஸ் ஆனது மூக்கில் ஏற்படும் நெரிசலைத் குறைக்கிறது.போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் ஓய்வு எடுத்துக் கொள்வது ஆகியவை உடலை இயற்கையாகவே தொற்றுநோயிலிருந்து மீள உதவுகிறது.இந்த சிகிச்சைகள் பாதுகாப்பானவை, மலிவானவை மற்றும் பக்க விளைவுகள் இல்லாதவை.

5: இருமல் சிரப்களை எப்போது பயன்படுத்தவும்:நாள்பட்ட ஒவ்வாமையால் ஏற்படும் இருமல், கக்குவான் இருமல் அல்லது பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படும் இருமல் போன்றவற்றிற்கு இருமல் சிரப்களை மருத்துவர் பரிந்துரைக்கலாம். ஆனால், சிரப்பின் அளவு, கால அளவு மற்றும் தரம் ஆகியவை குழந்தைகள் மருத்துவரால் நிர்ணயிக்கப்பட வேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் தானாகவே மருந்தின் அளவை நிர்ணயிப்பது தீங்கு விளைவிக்கும்.

news18

 


Post a Comment

0 Comments