
தாய்லந்தில் கடன் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வணிகருக்கு 1,210 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரசிட் ஜியேவ்கொக் (Prasit Jeawkok) அவரது இரு நிறுவனங்களின் மூலம் பலரைப் போலி முதலீடுகள் செய்யத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
மொத்தம் 242 குற்றச்சாட்டுகள் அவர் மீது கொண்டுவரப்பட்டன. அவை அனைத்திலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அவருக்கு 1,210 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு தண்டனைக்காலம் 806 ஆண்டுகள் 8 மாதமாகக் குறைக்கப்பட்டது.
மேலும் அவரது நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் 121 மில்லியன் பாட் (சுமார் 4.9 மில்லியன் வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது. அது பின்னர் 80 மில்லியன் பாட்டாகக் (சுமார் 3.2 மில்லியன் வெள்ளி) குறைக்கப்பட்டது.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு நபருக்கு முதலில் 111 ஆண்டுகள் 148 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தண்டனைக்காலமும் சுமார் 74 ஆண்டுகள் 9 மாதமாகக் குறைக்கப்பட்டது.
ஆனால் தாய்லந்துச் சட்டப்படி ஒருவர் அதிகபட்சம் 20 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை அனுபவிக்க முடியும்.
அவர்களும் மோசடியில் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட 267 பேருக்கும் இழப்பீடு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments