
அயோத்தியில் புதிய மசூதி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அடுத்த ஆண்டு புதிய மசூதி கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக இந்தோ - இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை தலைவர் ஜுஃபர் பரூக்கி தெரிவித்திருக்கிறார்.
கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06 அன்று அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சூழலில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அங்கு கடந்த ஆண்டு ராமர் கோவில் கட்டப்பட்டது. மறுபுறம் அயோத்திலேயே மசூதியும் கட்ட இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தது. இதையடுத்து அடுத்த ஆண்டே ஆயோத்தியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தன்னிப்பூர் என்ற கிராமத்தில் 5 எக்கம் நிலத்தை அரசு ஒதுக்கியது.
2026 ஏப்ரலில் புதிய மசூதி கட்டும் பணிகள் தொடங்கும்
சுன்னி மத்திய வக்ஃப் வாரியம், 'இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவி மசூதி கட்டும் திட்டத்தைத் தயாரித்தது. ஆனால், கள அளவில் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், புதிய மசூதி கட்டும் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட உள்ளதாக இந்தோ - இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை தலைவர் ஜுஃபர் பரூக்கி தெரிவித்திருக்கிறார்.
பாடா் மசூதிக்குப் பதிலாக கட்டப்படும் புதிய மசூதியின் திருத்திய வடிவமைப்பை அயோத்தி மேம்பாட்டு ஆணையத்துக்கு டிசம்பரின் இறுதியில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால் 2026 ஏப்ரல் மாதத்தில் புதிய மசூதி கட்டும் பணிகள் ஆரம்பமாகும். தன்னிப்பூரில் மசூதி நிலம் 5 ஏக்கர் அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில பிரச்சனைகள் காரணமாக 4 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிலைமை உள்ளது. எனவே, மசூதி கட்ட முயற்சிகள் ஒரே இடத்தில் முழுமையாக முடியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.
ரூ. 65 கோடி தேவை
ராமர் கோவில் கட்டுமானத்துடன் புதிய மசூதி பணிகளை ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ராமர் கோவில் திட்டத்திற்கு பொதுமக்கள் பெரிதும் நன்கொடை வழங்கியுள்ளனர். புதிய மசூதி கட்ட ரூ. 65 கோடி தேவைப்படுகிறது. இப்போது வெறும் ரூ. 3 கோடி மட்டுமே உள்ளது. குறைந்தபட்சம் ரூ. 10 கோடி முதல் 15 கோடி வரை நிதி இருந்தால் மாடுமே கட்டுமானம் தொடங்க முடியும். அதனால், அந்நிய நிதி அனுமதி சட்டம் (FCRA) படி வெளிநாட்டு நன்கொடையை அனுமதிக்க மத்திய அரசை அனுகி வருகிறோம்.
இதற்கான அனைத்து தகவல்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அனுமதி பெற்றுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இந்தோ - இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை தலைவர் ஜுஃபர் பரூக்கி தெரிவித்தார்.
தாமதம் ஏன்?
"அறக்கட்டளையிடம் நிதி இல்லை, அதனால்தான் வேலையைத் தொடங்க முடியவில்லை. புதிய மசூதிக்கான இடம் ஒதுக்கப்பட்ட பிறகு, கரோனா காலகட்டம் தொடங்கியது. அதனால்தான் தாமதம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் ஒரு வரைபடத்தை இறுதி செய்தோம், ஆனால் அதைக் கொண்டு நாங்கள் வெளியே சென்று இந்தியா முழுவதும் பலரிடம் பேசியபோது, வடிவமைப்பில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. தற்போது மசூதியின் புதிய வடிவமைப்பு கிட்டத்தட்டத் தயாராக உள்ளது. மசூதி 1400 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும், மீதமுள்ள வளாகம் பின்னர் உருவாக்கப்படும் என அறக்கட்டளையின் தலைவர் ஜுஃபர் அகமது ஃபாரூக்கி தெரிவித்தார்.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments