
இந்தோனேசியாவின் சுலாவேசித் (Sulawesi) தீவின் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீயில் 16 பேர் கருகி மாண்டனர்; மூவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.
சுலாவேசியின் மனாடோ (Manado) நகரில் சம்பவம் நிகழ்ந்தது.
பல உடல்கள் அறைக்குள்ளேயே கண்டெடுக்கப்பட்டன. மூத்தோர் பலர் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
12 பேரைப் பத்திரமாக வெளியேற்றி உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பியதாக அதிகாரிகள் கூறினர்.
முதியோர் இல்லத்தில் தீ சூழ்வதையும் உள்ளூர்வாசிகள் முதியோரைப் பத்திரமாக வெளியே கொண்டு செல்வதையும் உள்ளூர் ஊடகங்களில் காணமுடிந்தது.
17,000க்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் தீச் சம்பவங்கள் வழக்கமானவை என்றாலும் இயலாத முதியோர்கள் தங்கி இருந்த இல்லம் தீப்பிடித்ததை அனைவரும் சோகத்துடன் பேசி வருகின்றனர்.
இந்த மாதம் இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் 7 மாடி கட்டடத்தில் தீ பரவியதில் 22 பேர் மாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments