
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 16 டி20 போட்டிகள், 47 ஒருநாள் போட்டிகள் மற்றும் 45 டெஸ்ட் போட்டிகள் என மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி இருக்கிறார். ஆனாலும் அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.
அதேவேளையில் டெஸ்ட் அணியை பொறுத்த வரை முகமது சிராஜ் தொடர்ந்து முதன்மை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தும் அவரை ஒரே வடிவ பந்துவீச்சாளராக பார்க்கக்கூடாது என்றும் அவருக்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து வகையிலும் பயன்படுத்த வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் இந்திய அணியின் நிர்வாகமான பி.சி.சி.ஐ இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் முகமது சிராஜை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தி வருகிறது. அதேபோன்று எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை என்றாலும் ஒருநாள் போட்டிகளில் அவர் தற்போது மீண்டும் வாய்ப்பினை பெற இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
அதில் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு டி20 உலககோப்பையை கருத்தில் கொண்டு ஓய்வு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்தப் போகும் முதன்மை பந்துவீச்சாளராக முகமது சிராஜ்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதோடு 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியையும் கருத்தில் கொண்டும் அவரை இந்த தொடரில் பயன்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் அசித்தினால் தொடர்ச்சியாக ஒருநாள் அணியில் நீடிக்கவும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments