
மேற்காசியாவில் அமைந்துள்ள பாலைவன பிரதேசமான சவுதி அரேபியா சுட்டெரிக்கும் வெயிலுக்கும் கடுமையான வெப்பத்துக்கும் பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் தற்போது சவுதியில், இயற்கைக்கு மாறாக கடும் பனிப்பொழிந்து நிகந்துள்ள காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் கடுமையான வெப்பமும் எங்கும் மணல் மலைகள் நிறைந்த பாலைவனங்களும் தான்.
ஆனால் சமீபத்திய நாட்களில், உலகளவில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்கள் காரணமாக நடக்காத பல அரிய நிகழ்வுகள் நடந்தேறிவருகின்றது.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பிரதேசத்தில், வெள்ளைப் பனிகள் மணல் நிலப்பரப்புகளை மூடியுள்ளன.
எப்போதும் கடும் வெயிலை மட்டும் பார்த்த அரபிய மக்களை ஆலங்கட்டி மழையும், பனி படர்தலும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் முக்கிய பகுதிகள் வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனியால் மூடப்பட்டு இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் தற்போது கவனம் ஈர்த்து வருவதுடன் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.
manithan

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments