
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெற்றோரை இழந்து வாடிய குழந்தைகளுக்கு நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியாக அரசு உதவி கிடைத்துள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியாக மன்னார்குடி அருகே பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளிடம் பேசி முதலமைச்சர் நம்பிக்கை அளித்துள்ளார்.
பெற்றோர் இல்லாத நிலையில் உறவினர்களும் கைவிட்டதால், எந்த உதவியுமின்றி, என்ன செய்வதென்று அறியாமல் விக்கித்து நின்றனர். இந்த குழந்தைகளின் நிலை குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டது.
அதன் எதிரொலியாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏ பூண்டி கலைவாணன், திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று பார்த்தனர். அப்போது, குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக உரையாடியதுடன், அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.
News18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments