
ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளர் மிக்கேலா பெண்ட்ஹாவ்ஸ் (Michaela Benthaus) சக்கர நாற்காலியில் நடமாடுபவர்.
அந்தக் குறையை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் அவர் விண்வெளிக்குச் சென்றிருக்கிறார்.
செய்தியை BBC ஊடகம் வெளியிட்டது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் மலைப்பகுதியில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது திருவாட்டி பெண்ட்ஹாவ்ஸ் விபத்துக்கு ஆளாகினார். அவருடைய முதுகுத்தண்டுக் காயம் ஆறவில்லை.
உடல் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்ட பின்னரும் விண்வெளிக்குச் செல்ல முற்பட்டார்.
தம் கனவை நனவாக்க ஓய்வுபெற்ற SpaceX நிறுவன விண்வெளிப் பொறியியலாளர் ஹான்ஸ் கோனிக்ஸ்மானைத் (Hans Koenigsmann) தொடர்புகொண்டார்.
அவர் Blue Origin விண்வெளி நிறுவனத்தின் விண்கலனில் திருவாட்டி பெண்ட்ஹாவ்ஸ் பயணம் செய்ய ஏற்பாடு செய்தார்.
New Shepard விண்கலனில் இருவரும் நேற்று விண்வெளிக்குச் சென்று பத்திரமாகத் திரும்பினர்.
உடற்குறையுள்ளோர் இன்னமும் பல இன்னல்களைச் சந்திப்பதாகத் திருவாட்டி பெண்ட்ஹாவ்ஸ் குறிப்பிட்டார்.
சக்கர நாற்காலியிலிருந்து விண்கலனுக்குள் நுழைய நீண்ட இருக்கை உருவாக்கப்பட்டது.
திருவாட்டி பெண்ட்ஹாவ்ஸ் எளிதாக விண்கலனுக்குள் நுழையவும் விண்கலனிலிருந்து வெளியேறவும் மற்ற தரைவழிக் கருவிகள் பொருத்தப்பட்டதாக Blue Origin நிறுவனம் கூறியது.
"விண்வெளிப் பயணம் அனைவரையும் உள்ளடக்கிய சேவையாக இருக்கவேண்டும்," என்று New Shepard விண்கலனின் மூத்த துணைத்தலைவர் ஃபில் ஜோய்ஸ் (Phil Joyce) வலியுறுத்தினார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments