பண்டைய காலத் தமிழ் நூல் தொகுப்புகளில் ஒன்றான பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. இதனை மதுரை தமிழாசிரியர் பூதன் அவர்களின் புதல்வர் பூதஞ் சேந்தனார்
அவர்கள் பாடல்களாக இயற்றியுள்ளார்கள். இந்த நூல் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் பல நல்ல அறிவுரைகளை மிக எளிமையாக மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது.
கடவுள் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கி 40 வெண்பாக்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இனியவை நாற்பது-1
பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகவினிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
விளக்கம்:
- பிச்சை எடுத்தாவது படிக்க வேண்டும். அப்படிப் படிப்பது இனிமையானது.
- அப்படிப் பெற்ற கல்வி மூலம் சான்றோர் சபையில் மற்றவர்களுக்கு உதவுவது இனிமையானது.
- பெண்களது முத்துப் போன்ற சொற்கள் மிகவும் இனிமையானது.
- மேலானவர்களின் துணையுடன் வாழ்வது இனிமையானது.
இனியவை நாற்பது .. 2.
உடையான் வழக்கினி(து), ஒப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன்னினிது, மாணாதாம் ஆயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தானினிது நன்கு.
விளக்கம்:
- பணம் வைத்திருப்பவன் கொடுக்கும் ஈகை இனிது.
- கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்வது இனிது.
- வாழும் வாழ்க்கை நிலையில்லாதது என்பதை நன்றாக உணர்ந்து, அனைத்தையும் துறந்து வாழ்வது எல்லாவற்றிலும் இனிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments