Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-113


மகாராணி  பெருமிதம் கொண்டார். 

உண்மையில் நான் பாராட்டுகிறேன் . குமரகுரு மருத்துவரே நீங்கள் இத்தனை திறமை மிக்க ஓர் மனிதர் என்பதையும் சரி.தங்கள் குடும்பம் நாட்டாமை பரம்பரை என்பதையோ கூறி பெருமை பீத்தாது தலைக்கனம் கொள்ளாது சாதாரண சாமானியன் போல் காட்டிக் கொண்டு எல்லோரிடமும் அன்போடும் மரியாதையோடும் பழகிக் கொண்டமை என்னை ஆச்சரியப் படுத்துகிறது.

உண்மையிலே தங்களுடைய தாய் நன்றாகவே உங்களை வழி நடத்தி உள்ளார்.

அவர்களுக்கு நான் தலை குனிகிறேன் உங்களைப் போன்று ஒரு ஆங்கில மருத்துவரை உருவாக்கிடும் எண்ணம் அரசியாக இருந்தும் என்னிடம் எழவில்லையே .

நான் அதை நினைத்து வெட்கப் படுகிறேன்.நானோ இல்லை என் மன்னரோ இது போன்று ஓர் திட்டத்தைக் கட்டாயப் படுத்தி அதற்கான சிலவுத்   
தொகையையும் பொறுப்பு ஏற்றிருந்தால். கட்டளைக்குப்  பயந்தாவது இங்கு உள்ள மக்களில் பலர் ஆங்கில மருத்துவம் பயின்று இருப்பார்கள். பெரும் தவறு செய்து விட்டோம் நாங்கள்.நாட்டாமை அவர்களே நீங்கள் அதாவது உங்கள் பரம்பரையின் தொலை நோக்குப் பார்வைக்கு என் ஆட்சியே அடி பணிகிறது.

பாராட்டுக்கள்  என்றவர் மந்திரியின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கேட்டார். தங்களுக்கும் அப்படி ஓர் எண்ணம் தோணவில்லையா? மந்திரியாரே. என்று மந்திரி சற்று அமைதி காத்து விட்டு மன்னிக்க மகாராணி அவர்களே.

யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள்.அந்தப் பழமொழி நமக்குப் பொருத்தமாச்சு.

நம் ஆட்சியில் வரப்பு உயர நீர் உயரும் நீர் உயரக் குடி உயரும்குடி உயரக் கோண் உயரும் என்னும் வாய் மொழியைப் பின் பற்றி ஆட்சியாயிற்றே.

அதாவது நம் எண்ணமும் நோக்கமும் செயலும் நம்முடைய நாட்டு மக்கள் வறுமை இன்றி வாழ வேண்டும். அடுத்த நாட்டில் அடிமையாகது காத்திட வேண்டும் .

என்னும் மனப்போக்கிலே சென்று விடும் ஆட்சி அதுதான் ராஜ ஆட்சி.ஆகையால் வேறு கோணத்திலே தான் நம் பயணம் இருக்கும் இருந்திட வேண்டும் .
அதனால் அரசே தாங்கள் இதற்காகக் கலங்கிட வேண்டாம்.

இனி வரும் கால கட்டத்தில் இதனையும் நம்முடைய ஆட்சியில் இணைத்துக் கொள்வோம்  நாட்டாமை ஆட்சி வேறு அரசாட்சி வேறு மகாராணி அவர்களே இரண்டையும் பிரித்துப் பார்த்திடுக என்று விளக்கமளித்தார் மந்திரி.

(தொடரும்) 

 


Post a Comment

0 Comments