
குறள் 102:
காலத்தி னாற் னாற்செய்த நன்றி ன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் ப் பெரிது.
தேவைக் குரியநேரம் செய்கின்ற சிற்றுதவி ஞாலத்தை விஞ்சும் அளவு
குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.
பயனெதிர் பார்க்காமல் செய்த உதவி கடலினும் என்றும் பெரிது.
குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.
தினையளவே நன்மை எனினும் பயனால் பனையள வென்பார் மகிழ்ந்து.
குறள் 105:
உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.
உதவி அளவைப் பொறுத்தல்ல ஆனால் உதவிபெற்றோர் பண்பைப் பொறுத்து.
குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.
துறக்காதே துன்பம் துடைத்தோரின் நட்பு! மறக்காதே தூயோர் உறவு.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments