Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-114


சற்று நேரம் அமைதி காத்து விட்டு மகாராணியாரே பேசினார்.
 
"ஓ நாட்டாமையின் புகழ் கூறும் போதே உன் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.நான் நன்கு கவனித்தேன் என்றார். 

வெக்குண்டு தலை சொறிந்து கொண்டு மண்ணை நோக்கினார் கணக்கப்பிள்ளை.

"சரி சரி வெட்கத்தை விட்டுத் தள்ளும்" என புன்னகையோடு கூறினார் ராஜகுமாரி.

அவர் கூறியதுமே சவையே சிரித்தது.அப்போது ராஜகுமாரி  குமரனைப் பார்த்துக் கேட்டார். "மருத்துவர் குமரகுரு அவர்களே,தாங்கள் ஏன் தங்கள் கடமையை உங்கள் ஊரில் தொடங்காமல் இங்கு வந்தீர்கள்.அது கண்டிப்பாகப் பணத்துக்காக இருக்காது காரணம் உங்கள் குடும்பப் பின்னனியை வைத்துப் பார்க்கும் போது புரிகிறது.

ஏனையோர் போல் உங்கள் குறிக் கோள் பணமில்லை.வேறு என்னவாக இருக்கும் புகழ் பாராட்டு இலட்சியம்  பந்தயம் இப்படி ஏதாவது ஒன்றுக்காகவா நீங்கள் இங்கு வந்து என்னோடு கஸ்டப் பட்டீர்கள் .இல்லை இதைத் தவிர வேறு ஏதேனும் காரணம் உண்டா?" 

என்று புன்னகையோடு ராஜகுமாரி குமரனைப் பார்த்துக் கேட்டதும். குமரன் இருக்கை விட்டு எழுந்தான். 

"தாங்கள் கூறுவதில் எவையும் இல்லை அரசே என் தந்தையின் ஆசைப் படியே நான் இங்கு வந்தேன்.இதோ முன்பாகவே தானே உள்ளார்.தந்தை அவர்களைக் கேளுங்கள்.நான் கூறுவது அத்தனையும் உண்மை.அரசி கொடுத்த அறிவிப்பு தந்தையின் காதுக்கு எட்டவே அவர் என்னிடம்  அன்புக் கட்டளை இட்டார்.  .

"குமரா உன் தாத்தாவோட ஆசை அந்நாளிலே ஏதோ ஒரு வகையில் ரொம்பவும் நோயின் பிடியில் சிக்கித் தவிப்போருக்கு பலரின் முயற்சியோடு எனது முயற்சியும் இணைய வேண்டும். அந்த முயற்சி போட்டியாக மாற வேணும் நான் எனது படிப்பின் தீவிரத்தைக் காட்டி நோயாளியை நோயின் பிடியில் இருந்து மீட்டிட வேண்டும் .

"அங்கே என் குடும்பம் கௌரவம் காணவேண்டும்.என்று கூறிக் கொண்டே இருந்தார்.அவர் துரதிஷ்டம் அப்படி ஓர் வாய்ப்புகள் வரவேயில்லை. இன்று இந்த அறிவிப்பு எனது தந்தையின் ஆசையைக் கண் முன்னே கொண்டு வருகிறது  குமரா நீ இந்த இடத்துக்குப் போ கண்டிப்பாக நிறையவே மருந்துவர்கள் வருவார்கள்.

"உனக்கும் போட்டி போட்டுப் பணி செய்யும் வாய்ப்பு வரும்.அதில் உன் அறிவின் திறமையைக் காட்டி ராஜகுமாரியை நோயில் இருந்து முழுமையாக மீட்டு  அரசியிடம் ஒப்படைத்து விட்டு வெற்றியோடு வீடு திரும்பு."

"நம் தாத்தா ஆசியும் என்னோட ஆசியும் உனக்கு உண்டு.முன்னோர் ஆசை இவை எனக் கூறி என்னை என் தந்தையே இங்கு அனுப்பி வைத்தார்.அவர்களின் ஆசைப் படியே நான் வந்தேன் ராஜகுமாரி அவர்களே" எனக் குமரன் கூறி முடித்தான்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments