
குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.
துயர்துடைத்தோர் நட்பை எழுபிறவி ஆனாலும் எண்ணவேண்டும் நாமிங்கே சொல்.
குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
நன்மையை என்றும் மறக்காதே! தீமையை அன்றே மறப்பது நன்று.
குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும்.
துன்பத்தைச் செய்தாலும் அன்பரோ முன்செய்த நன்மையை எண்ணி மற.
குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு
இங்கே அறத்தை மறந்தாலும் வாழ்வுண்டு நன்றி மறந்தாலோ தாழ்வு.
12.நடுவுநிலைமை!
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின்.
ஒருதலைச் சார்பின்றி நீதி வழங்கும் நடுநிலையே வாழ்வின் அறம்
குறள் 112:
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து.
எப்போதும் நீதிமானின் செல்வம் தலைமுறையை வற்றாமல் காக்கும் உணர்.
குறள் 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.
என்றும் நடுநிலையை விட்டால் வளம்சேரும் என்றால் வளம்தவிர்த்தல் நன்று.
குறள் 114:
தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்.
கெட்டவரா? நல்லவரா? சென்றபின் எஞ்சிநிற்கும் நற்புகழும் மாப்பழியும் சான்று.
குறள் 115:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.
வாழ்வதும் தாழ்வதும் வாழ்வின் இயல்பாகும்! கோடாமை சான்றோர்க் கழகு
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments