Ticker

6/recent/ticker-posts

ஒளவையாரின் நல்வழி பாடல்!-19


பாடல் - 37. 

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.

விளக்கம்: 

முன்பு செய்த நல்ல செயலுக்கும், தீய செயலுக்கும் உண்டான தீர்வுகள் வேதம் முதலான எந்த நூல்களிலும் கிடையாது. எதையும் நினைத்து கவலைப் பட வேண்டாம். நேர்மையாக  நடந்தால், நினைப்பவை எல்லாம் நடக்கும். எந்த  ஊழ் வினையாலும்  அதைத் தடுக்க முடியாது. 

பாடல் - 38.

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.

விளக்கம்:

பற்று அற்றவர்களும், துறவிகளும், மெய்ப் பொருளைத் தான் தேடுவார்கள். அவர்கள் தேடும் மெய்ப் பொருளுக்கு நன்மை என்றும், துன்பம் என்றும் கிடையாது. தான் என்ற தன் முனைப்பும் கிடையாது. இது சரி, அது சரியில்லை என்பதும் கிடையாது. அவர்கள் நிற்கும் நிலை தான் தெய்வமும், தத்துவமும் ஆகும்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments