
முட்டையில் இருக்கக்கூடிய சத்துக்கள் உடல் சோர்வு மற்றும் நரம்பு பலவீனத்தை தடுக்கிறது.
உலக அளவில் சத்து குறைபாடு காரணமாக நோய்கள் ஏற்படுகிறது. நோய்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிகிறது.
குறைந்த விலையில் கிடைக்கும் கோழி முட்டையில் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 100 கிராம் முட்டையில் கால்சியம் 56 மில்லி கிராம் இருக்கிறது.
கால்சியம் என்பது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. முட்டையில் இரும்பு சத்து 1.75 மி.கி இருக்கிறது.
இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் தட்டுக்களை உருவாக்கி ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. அதோடு உடல் சோர்வு மற்றும் நரம்பு பலவீனத்தை தடுக்கிறது.
பாஸ்பரஸ் சத்தும் அதிகமாக உள்ளது. இது எலும்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது . முட்டைகளை சாப்பிடுவதால் உடலில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து சீராக இருக்க உதவுகிறது .
முட்டையில் பொட்டாசியம் சத்தும் உள்ளது. இது இதய துடிப்பை ஒழுங்குபடுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. முட்டையில் உள்ள சோடியம் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது மட்டுமல்லாமல் செலினியம், துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீசு சத்துக்களும் உள்ளன.முட்டையில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், கொழுப்பு சத்துக்கள் மனித உடலை பல நோய்களில் இருந்து காத்துக் கொள்ள உதவுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments