Ticker

6/recent/ticker-posts

முதலிரவுக்கு சென்ற 20 நிமிடத்தில்... கணவனுடன் வாழ மறுத்த இளம் பெண் - ஷாக் சம்பவம்!


உத்தர பிரதேசத்தில் தியோரியா நகரில் பல மாதங்களாக திட்டமிடப்பட்ட திருமணம் வெறும் ஓரிரு நிமிடங்களில் முறிந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இச்சம்பவத்தின் பின்னணி குறித்து இங்கு விரிவாக காணலாம்.

உத்தர பிரதேசத்தின் தியோரியா நகரில் உள்ள பலுவானி எனும் பகுதியில் தந்தை வைத்திருக்கும் பலசரக்கு கடையை அவருடன் சேர்த்து கவனித்து வருபவர் விஷால் மாதேஷியா. விஷாலுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி சேலம்பூர் பகுதியைச் சேர்ந்த பூஜா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் நடந்து மணமகனுக்கான சடங்குகள், மணப்பெண் வீட்டில் நடந்துள்ளது. இதற்காக மாலை 7 மணியளவில் மணமகன், மணப்பெண் வீட்டுக்கு வந்துள்ளார். அன்றிரவு முழுவதும் மணப்பெண் வீட்டில் சடங்குகள் சீரும் சிறப்புமாக நடந்துள்ளன.

அதிர்ச்சியில் உறைந்த மணமகன் வீட்டார்

இதற்கு மணப்பெண், மணமகன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மணமகன் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. அறைக்குள் சென்ற 20 நிமிடங்களில் மணப்பெண் அறையைவிட்டு வெளியே வந்து, இனி விஷாலுடன் வாழப்போவதில்லை என பகீரங்கமாக கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அங்கிருந்த மணமகன் வீட்டாரும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

காரணத்தை சொல்லாத மணப்பெண்

முதலில் அந்த பெண் நகைச்சுவைக்காக விளையாடுகிறார் என அவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் பிறகுதான், அவர் உண்மையாகவே சொல்கிறார் என்பதை புரிந்துகொண்டுள்ளனர். அறையில் என்ன நடந்தது?, என்ன பிரச்னை?, ஏன் இந்த திடீர் மாற்றம்? என விசாரித்துள்ளனர். ஆனால் அதற்கு அந்த பெண் எதையும் சொல்லாமல் மௌனமாகவே இருந்துள்ளார். தனது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என அவர் சொல்லியிருக்கிறாரே தவிர அதற்கான காரணத்தை அவர் சொல்லவே இல்லை. மணமகன் வீட்டார் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும், மணப்பெண் சமாதானமாகவில்லை. "எனது பெற்றோரை கூப்பிடுங்கள், இங்கு இனி என்னால் வாழவே முடியாது" என அந்த பெண் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, விஷால் குடும்பத்தினர் மணப்பெண் பூஜாவின் வீட்டாருக்கு தகவல் சொல்லியிருக்கிறார். பூஜாவின் பெற்றோரும், உறவினரும் கூட பிரச்னையை சுமுகமாக முடித்துவைக்கலாம் என பேசியிருக்கிறார்கள். ஆனால், விஷாலுடன் வாழ முடியாது என்ற முடிவை மட்டும் மாற்றவே இல்லை, மேலும் திடீரென அவர் அப்படி கூறுவதற்கான காரணத்தையும் சொல்லவே இல்லையாம்.

பஞ்சாயத்தில் நடந்தது என்ன?

இதையடுத்து அவர்களின் கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு மறுநாளே, அதாவது நவம்பர் 26ஆம் தேதியே இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது. சுமார் 5 மணிநேரம் மணமக்கள் வீட்டாரும், கிராமத்தினரும் இந்த பிரச்னைக்காக பேசியிருக்கின்றனர். ஆனால், அதிலும் எந்த முடிவும் எட்டப்படாததால், அந்த ஜோடி பிரித்துவைக்கும்படி பஞ்சாயத்தினரும் அறிவுறுத்தியிருக்கிறார். இதற்காக தனியே ஒப்பந்தம் ஒன்றை தயாரித்து, பரஸ்பரம் இந்த திருமணம் செல்லாது என எழுதி கையெழுத்திட்டுள்ளனர். இரு தரப்பில் இருந்தும் கொடுக்கப்பட்ட பரிசுகள், பணம் ஆகியோவை திருப்பிக்கொடுக்கப்பட்டன. விஷால் - பூஜா இருவரும் மறுமணம் செய்துகொள்ளலாம் என்றும் பஞ்சாயத்தில் தெரிவித்துள்ளனர். அதன்பின் பூஜா, நவம்பர் 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு தனது வீட்டுக்கு திரும்பிவிட்டாராம்.

மணமகன் சொல்வது என்ன?

இதுகுறித்து மணமகன் விஷால் கூறுகையில், "திருமணத்திற்கு முன்னரே தன்னை திருமணம் செய்துகொள்வதில் விருப்பமா, இல்லையா என எதையுமே சொல்லவில்லை. பூஜா என்னிடம் நன்றாக கூட பேசவில்லை. திருமணத்திற்கு பின் அவள் அப்படி நடந்துகொண்டது இரு வீட்டாருக்கும் சங்கடத்தையே தந்தது" என்றார். மேலும், பூஜா மீது விஷால் தரப்பில் போலீசாரிடம் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. இதன்மூலம் பூஜாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதையும், ஆனால் அதை மிக தாமதமாக வெளிப்படுத்தியிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், அதற்கான காரணம் வெளியே தெரியவில்லை.

வைரலான சம்பவம்

இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரக்காலமாகிவிட்ட நிலையில், இணையத்திலும் வைரலாகி உள்ளது. அந்த பெண் செய்தது தவறு என்றும் லட்சக்கணக்கில் திருமணம் செய்துவிட்டு வெறும் ஓரிரு மணிநேரத்தில் அதை வேண்டாம் என சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். இருப்பினும், அந்த பெண் தவறான முடிவுக்குச் செல்லாமல் குறைந்தபட்சகம் திருமணத்திற்கு பிறகாவது இதை கூறினாரே... என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

zeenews

 


Post a Comment

0 Comments