அசைவ பாட்ஷா

மெக்கோரோனியை அவித்து
வடி கட்டி எடுக்கவும்.
அதனுடன் சேர்த்து உண்ண
சோஸ் தயாரிக்கத் தேவையானவை.
கரட் -1
சலறி தண்டு -2
தக்காளி -1
பழுத்த மிளகாய் -3
வெங்காயம் -1
பூண்டு -4
இஞ்சி-1 துண்டு
இவைகளை ஒன்றாக அரைக்கவும்
மை போல் அரைக்க வேண்டாம்.
இதனுடன் சேர்க்கத்
தேவையானவை.
அரைத்த இறைச்சி ஆடு அல்லது மாடு
தேவைக்கு ஏற்ப.
ஓலிவ் ஓயில் தாளிக்க
உப்பு சிக்கன் சோஸ்
தேவைக்கு ஏற்ப.
தக்காளி பேஸ் கடையில் கிடைப்பவை 1-கப்.
இறுதியாய் தூவ
கொத்த மல்லி
ஆப்பிள் வினிகர்
சைனிஸ் எள்ளு
எண்ணெய்.
சாப்பிடும் போது சீஸ் போடலாம்
செய் முறை
அடுப்பில் பாத்திரத்தை வைத்து
எண்ணெய் ஊற்றி சூடானதும்
முதலில் இறைச்சியைப் போட்டு
வதக்கவும் பாதி வெந்து வரும் போதே
அரைத்த கலவையைச் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி விட்டு தாக்காளி பேஸ்ட் உப்பு சிக்கன் சோஸ் சேர்த்து 2-கப் நீர் விட்டு அடுப்பை குறைவாக வைத்து 1- மணி நேரம் அவிய விடவும் அடிப் பிடிக்காத வாறு கிளறிக் கொள்ளவும் நீர் வற்றி நன்றாக அல்வா பதமாய் அரும் போது வினிகர் எள்ளு எண்ணெய் மல்லி தூவி கிளறி இறக்கவும். மெக்கரோனியை பாத்திரத்தில் போட்டு அதன் மேலே தயாரான சோஸ் வைத்து சீஸ் தூவி சாப்பிடவும்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments