
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது புதிதாக 25 விழுக்காட்டு வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.
அது உடனடியாக நடப்புக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரானுடன் அதிக வர்த்தகம் செய்யும் நாடுகளில் சீனா,இந்தியா, துருக்கியே, ஈராக், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவை அடங்கும்.
அவை அனைத்து மீதும் வரி விதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஈரானில் தற்போது அரசாங்கத்துக்கு எதிராகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அது வெளிநாட்டுத் தலையீட்டுடன் நடப்பதாக ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதை ஒடுக்க அந்நாட்டு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கின்றனர்.
10,700க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு இடையிலான மோதலில் 648 பேர் மாண்டனர்.
அவர்களில் 505 பேர் ஆர்ப்பாட்டக்காரர்கள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு சொன்னது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால் அமெரிக்கா பதிலுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என்று திரு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments