Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-2


இனியவை நாற்பது-3

ஏவது மாறா இளங்கிளைமை முன்னினிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகவினிதே
ஏருடையான் வேளாண்மை தானினி(து) ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

விளக்கம்: 

இடுகின்ற பணியை மாற்றம் எதுவும் இல்லாமல் செய்து முடிக்கும் பணியாளர்களைக் கொண்டிருப்பது இனிது. 
நாள் தோறும் பிழை இல்லாமல் கல்வி கற்பது இனிது. 
ஏர் வைத்திருக்கும் உழவன் செய்யும் வேளாண்மை இனிது.

செல்லும் இடங்களில் எல்லாம் மற்றவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்வது  இனிது. 

இனியவை நாற்பது-4 

யானையுடைய படைகாண்டல் முன்னினிதே
ஊனைத்தின்(று) ஊனைப் பெருக்காமை முன்னினிதே
கான்யாற்(று) அடைகரை ஊரினி(து) ஆங்கினிதே
மானம் உடையார் மதிப்பு.

விளக்கம்:

ஒரு நாட்டில் யானைப் படை இருப்பது இனிது.
ஒரு உயிரைக் கொன்று அதைச் சாப்பிட்டு உடல் வளர்க்காமல் இருப்பது இனிது. 
பூத்துக் குலுங்கும் ஆற்றங்கரை இருக்கும் ஊரில் வாழ்வது இனிது. 

மானம் உள்ளவர்களாக மதிக்கப் படுவது இனிது. 

(தொடரும்)

 


Post a Comment

0 Comments