
அடக்கமுடைமை
குறள் மொழி 33
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
குறள் எண்:129
குறள் மொழியின் பொருள் :
நெருப்பினால் சுட்ட புண் வெளியே தழும்பை ஏற்படுத்தினாலும், நாளடைவில் புண் ஆறிவிடும். ஆனால், ஒருவர் நாவினால் சொன்ன சொல்லால் ஏற்பட்ட காயம் வடு மனதில் இருந்து எப்போதும் .ஆறாது.
நபிமொழி:
மனிதர்களின் தவறுகளில் அதிகமானவை அவர்களின் நாவினால் தான் ஏற்படுகின்றன. அது ஆறாத இரணமாக அமைந்து விடுகின்றது.
இறைதூதர் நபி (ஸல்), ஆதாரம்:நூல் - தப்ரானீ : 538
பயனில் சொல்லாமை
குறள் மொழி:34
சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.
குறள் எண் : 200
குறள் மொழியின் பொருள் :
ஒருவர் பேசும்போது பயனுள்ள, நல்ல சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும் பேச வேண்டும்; பயனற்ற, பயனில்லாத சொற்களைச் சொல்லாது விடுதல் வேண்டும்.
நபிமொழி:
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியவர் ஒன்றைப் பேசினால் அவர் நல்லதையே பேசட்டும்.
தீ நட்பு
குறள் மொழி:35
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.
குறள் எண் :819
குறள் மொழியின் பொருள் :
சில மனிதர்கள் செய்வது வேறாகவும், சொல்வது வேறாகவும் இருக்கும். அப்படிப்பட்ட குணம் உள்ளவர்களின். தொடர்பு என்பது கனவில் கூட துன்பத்தைத் தருவதாக அமையும்.
நபிமொழி :
நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களைச் செய்ததாகப் பிறரிடம் கூறுவது ஏன்?
அவ்வாறு செய்வது, சொல்லும், செயலும் வேறுபடுவது அல்லாஹ்விடம் பெரும் பாவமாக இருக்கிறது.
இறைவசனம், திருக் குர்ஆன்: 61:2,3)
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments