
ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தஃபீசுர் ரகுமான் கொல்கத்தா அணிக்காக 9.20 கோடிக்கு வாங்கியது. ஆனால் நேற்று அவரை அணியிலிருந்து நீக்குமாறு கொல்கத்தாவுக்கு பிசிசிஐ கெடு விதித்தது. அதாவது வங்கதேசத்தில் சிலர் ஹிந்து மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த தாக்குதலில் சில மக்கள் இயற்கை எய்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தை சேர்ந்த ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்று இங்குள்ள ஆளுங்கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை அணியிலிருந்து நீக்குமாறு கொல்கத்தா நிர்வாகத்திற்கு பிசிசிஐ அறிவுறுத்தியது.
அதை உடனடியாக ஏற்றுக்கொண்டு ரஹ்மானை அணியிலிருந்து விடுவித்த கொல்கத்தா விரைவில் மாற்று வீரரை தெரிவிப்போம் என்றும் வைத்துள்ளது. கொல்கத்தா நிர்வாகம் மற்றும் பிசிசிஐ எடுத்துள்ள இந்த முடிவு வங்கதேச ரசிகர்களிடம் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் அதற்கு பதிலடியாக 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவுக்கு வரமாட்டோம் என்று வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது.
அத்துடன் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்த அனுமதிக்குமாறு வங்கதேச வாரியம் ஐசிசி கோரிக்கை வைத்துள்ளது. அது மட்டுமின்றி தங்கள் நாட்டு வீரரை விளையாட அனுமதிக்காத ஐபிஎல் தொடரை வங்கதேசம் மொத்தமாக புறக்கணிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதற்காக வங்கதேசத்தில் ஐபிஎல் 2026 தொடரை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட உள்ளதாகவும் நாட்டு அரசாங்கத்தின் ஆலோசகர் ஆசிப் நஸ்ருள் அறிவித்துள்ளார்.
இந்தியாவிடம் அடிமைபட்டு கிடந்த காலங்கள் மலையேறிவிட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வங்கதேசம் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு செல்லாது என்ற முடிவை வங்கதேச வாரியம் இன்று எடுத்துள்ளது. இந்திய வாரியத்தின் வன்முறை வகுப்புவாத கொள்கையின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்”
“அத்துடன் ஐபிஎல் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரத்துவதை நிறுத்துமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். எந்த சூழ்நிலையிலும் வங்கதேசம், வங்கதேச வாரியம், வங்கதேச வீரர்களின் அவமானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்து விட்டன” என்று கூறியுள்ளார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments