
ஈரானில் அரசுக்கு எதிராக அமைதியாகப் போராடுபவர்களை சுட்டு வீழ்த்தினால் அமெரிக்கா தலையிடும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயிலான மோதல்களில் வன்முறை வெடித்துள்ளன. கோம் நகரில் ஏற்பட்ட வன்முறையில் அங்குள்ள தெருக்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அசாதாரண சூழல் நிலவியது. இதுவரை வன்முறை சம்பவத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஈரானில் அமைதியான முறையில் போராடுபவர்களை அரசு சுட்டுக் கொன்றால், அவர்களை காப்பாற்ற அமெரிக்கா முன்வரும் என்றும் தாங்கள் தாக்குதலுக்குத் தயார் நிலையில் இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதேநேரம், டிரம்பின் மிரட்டல் சட்டவிரோதமானது என்றும் இதனை ஐ.நா. அவை கண்டிக்க வேண்டும் என்றும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தங்களை தாக்கினால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று ஐ.நா. அவைக்கு ஈரான் கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், போராட்டமும், வன்முறையும் வெவ்வேறானது என்று கூறியுள்ள ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி, வன்முறையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பலன் இல்லை என்றும் அவர்களை அவர்களுக்கான இடத்தில் வைக்க வேண்டுமென்றும் எச்சரித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments