
ஸ்பெயினில் ஒரு வித்தியாசமான கொண்டாட்டம்.
குதிரைகள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் குதித்து ஓடுகின்றன.
அதே வேளையில் வீட்டிலுள்ள செல்ல நாய்கள், பூனைகள் ஆகியவற்றைப் புனித நீரால் ஆசிர்வதிக்க உரிமையாளர்கள் அவற்றைத் தேவாலயத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இவ்விரு மாறுபட்ட சடங்குகள் கத்தோலிக்க செயிண்ட் ஆன்ட்டனியைக் கௌரவிக்கும் கொண்டாட்டத்தில் இடம்பெறுகின்றன.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை ஆதரித்து, பராமரித்தவர் அவர்.
Las Luminarias எனும் அந்தச் சடங்கு விலங்குகளைப் புனிதப்படுத்த செய்யப்படுகிறது.
அது ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு விநோதமான நோய் ஒன்று கிராமத்திலிருந்த அனைத்து விலங்குகளையும் பாதித்தது. தீயிலிருந்து வெளியேறும் புகை விலங்குகளைக் குணமடையவைத்ததாக அங்கு வசிக்கும் பலர் நம்பினர். அன்றிலிருந்து ஆண்டுதோறும் அது கொண்டாடப்படுகிறது.
குதிரைகளை நெருப்பில் ஓடவைக்கும் பழக்கத்திற்கு விலங்கு உரிமை ஆதரவுக் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும், குதிரைகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments