
கண்ணாடி அணிவது கண்களைப் பலவீனப்படுத்தும் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் இது உண்மையில் ஒரு தவறான கருத்து என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியாவில் கண் ஆரோக்கியம் தொடர்பான மிகவும் பொதுவான நம்பிக்கைகளில் "ஒருமுறை கண்ணாடி அணியத் தொடங்கினால், உங்கள் கண்கள் கண்ணாடியையே சார்ந்து இருக்கும், மேலும் படிப்படியாக பலவீனமடைந்துவிடும்" என்பது ஒன்றாக இருக்கிறது.அதாவது கண்ணாடி அணிவது கண்களைப் பலவீனப்படுத்தும் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் இது உண்மையில் ஒரு தவறான கருத்து என்கிறார்கள் மருத்துவர்கள். குர்கானில் உள்ள வையான் கண் மையத்தில் பணியாற்றும் கண் மருத்துவரும் மற்றும் கண் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் நீரஜ் சந்துஜா பேசுகையில், “கண்ணாடிகள் உங்கள் கண்களைப் பலவீனப்படுத்தாது. அவை பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்து, நீங்கள் தெளிவாகப் பார்க்க உதவுகின்றன. அவை கண்ணின் அமைப்பை மாற்றுவதில்லை அல்லது கண்களைச் சோம்பேறியாக்குவதில்லை" என்று குறிப்பிட்டார்.
கண் கண்ணாடிகள் பார்வையை மோசமாக்குவதாக மக்கள் ஏன் நினைக்கிறார்கள்?
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, ஆஸ்டிஜிமாடிசம் மற்றும் பிரஸ்பயோபியா (முதுமைப் பார்வை) போன்ற நிலைகள், கண்ணாடியால் அல்லாமல், கண்ணின் வடிவம் அல்லது அதன் குவிக்கும் திறனில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்றன. இந்த சூழலில் "கண் கண்ணாடிகள் ஒளியை வளைப்பதன் மூலம், பிம்பங்கள் விழித்திரையில் சரியாக விழும்படி செய்கின்றன," என்று டாக்டர் சந்துஜா விளக்குகிறார். இவை கண் தசைகளை சேதப்படுத்துவதில்லை அல்லது கண் பார்வைத்திறனை குறைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சிலர் கண்ணாடி அணியத் தொடங்கிய பிறகு தங்கள் பார்வைத் திறன் மோசமடைவதாக உணர கூடும், இது பொதுவாக ஒரு காரணம் அல்ல, மாறாக தற்செயல் நிகழ்வு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகளிடமும் இளம் வயதினரிடமும், கிட்டப்பார்வையானது வயது அல்லது வளர்ச்சியுடன் இயற்கையாகவே அதிகரிக்கக்கூடும். ஆனால் இந்த மாற்றத்தை கண்ணாடிகள் ஏற்படுத்துவதில்லை, அவை அதை வெளிப்படுத்துகின்றன, அவ்வளவுதான் என்றார்.
கண்ணாடியை கழற்றும் போது பார்வை ஏன் மோசமாகத் தெரிகிறது?இது நினைத்து கொள்வது தான். பார்வை குறைப்பதற்கு ஏற்ப சரியான லென்ஸ்கள் மூலம் நீங்கள் தெளிவாகப் பார்க்கத் தொடங்கும் போது, உங்கள் மூளை கூர்மையான பார்வைக்குத் தன்னை மாற்றிக்கொள்கிறது என்று டாக்டர் சந்துஜா விளக்குகிறார். ஆனால் உங்கள் கண்ணாடியைக் கழற்றும்போது, மங்கலான பார்வை மிகவும் வெளிப்படையாகிறது. இதன் அர்த்தம் உங்கள் கண்கள் பலவீனமடைந்துவிட்டன என்பதல்ல, மாறாக தெளிவான பார்வை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கண்ணாடி அணிந்து தெரிந்து கொண்டீர்கள் என்பதே ஆகும்.
பரிந்துரைக்கப்படும் கண்ணாடியை அணியாவிட்டால்.தேவைப்படும்போது கண்ணாடியை அணியாமல் இருப்பது நன்மையை விட அதிக தீங்கையே விளைவிக்கும். "பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடியை அணியாமல் இருப்பது கண் சோர்வு, தலைவலி, பார்வை மங்குதல் மற்றும் கவனக்குறைவு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். குறிப்பாக டிஜிட்டல் திரைகளுக்கு முன்னால் நீண்ட நேரம் செலவிடும் வல்லுநர்களிடையே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறிப்பாகப் பொதுவானது." குழந்தைகளுக்கு இதன் தாக்கம் இன்னும் கணிசமானதாக இருக்கலாம். சரி செய்யப்படாத பார்வை குறைபாடு கற்றல், உடல் நிலை மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றைப் பாதிக்கலாம். ஒருவேளை பார்வையில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் சரியான பவர் கொண்ட கண்ணாடியை அணிவது ஆரோக்கியமான பார்வை வளர்ச்சிக்கு உதவுகிறது என்கிறார் டாக்டர் நீரஜ் சந்துஜா.
கண்ணாடிகள் கண் பார்வை திறனை பாதிக்கின்றனவா?இல்லை. கண்ணாடிகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பார்வைக் குறைபாடுகளை மட்டுமே சரி செய்கின்றன என ஸ்டெரிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் ஜீவன் கஸ்ரா கூறியுள்ளார். "கண்ணாடிகள் தெளிவான பார்வையை வழங்க, ஒளியை விழித்திரையில் மீண்டும் குவியச் செய்கின்றன. அவை கண் தசைகளை பலவீனப்படுத்துவதில்லை அல்லது கண்களுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிப்பதில்லை என்றார். காலப்போக்கில் கண்ணாடிகளின் பவர் மாறுவது என்பது பொதுவாக இயற்கையான கண் வளர்ச்சி, முதுமை அல்லது அருகிலுள்ள பொருட்களைப் பார்ப்பதற்கான தேவை அதிகரிப்பு தான் காரணமே தவிர கண்ணாடிகள் அணிவதால் அல்ல.
வழக்கமான கண் பரிசோதனைகளின் முக்கியத்துவம்:வழக்கமான அடிப்படையிலான கண் பரிசோதனைகள் உங்கள் கண்ணாடி பவர் துல்லியமாக இருப்பதையும், உங்கள் கண்கள் சௌகரியமாக இருப்பதையும் உறுதி செய்கின்றன. பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை அணிவது கண் பலவீனத்தின் அடையாளம் அல்ல, மாறாக கண் பராமரிப்பின் அடையாளம். கண்ணாடிகள் உங்கள் கண்களைப் பலவீனப்படுத்துவதில்லை. அவை தேவையற்ற சிரமத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றன மற்றும் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன என்றார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments