Ticker

6/recent/ticker-posts

இணையப் போர்க்களத்தில் சூடுபிடிக்கும் ஈரானிய AI காணொளிகள்


ஈரான் போருடன் தொடர்புடைய காணொளிகளும் உயிரோவியங்களும் இணையத்தில் பரவுகின்றன.

கொள்கைப் பிரசாரத்துக்காகச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு அவை தயாரிக்கப்பட்டுள்ளன.

ஈரானுடன் தொடர்பு கொண்ட குழு ஒன்று YouTubeஇல் பதிவேற்றம் செய்த இசைக் காணொளி தீப்போல பரவியது.இம்மாதம் அது சமூக ஊடகத்திலிருந்து நீக்கப்பட்டது.

எனினும் ஒருமுறை இணையத்தில் பதிவுசெய்யும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கும் சாத்தியம் மிகக் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்படும் காணொளிகள் மனத்தளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுவதை வல்லுநர்கள் சுட்டினர்.

மக்களின் கவனத்தை எளிதில் கவரும் வண்ணம் அமைந்துள்ளன அந்தக் காணொளிகள்.

இந்தப் போக்கு “slopaganda” என்று அழைக்கப்படுகிறது.

போர் காலத்தில் தவறான தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் இப்போது நகைச்சுவை, இசை போன்றவற்றைப் பயன்படுத்தி தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு தகவல்கள் மிகைப்படுத்தப்படுகின்றன.

அது அதிக அளவிலானோரை எளிதாகவும் துரிதமாகவும் சென்றடைகிறது.

உண்மையா என்று சரிபார்ப்பதுகூடச் சிக்கலாகிறது.

ராணுவரீயாக ஈரான் பின்தங்கியிருக்கலாம்.

எனினும் இணையத்தில் தகவல்களைக் கொண்டுசெல்லும் களத்தில் அது அதிவேகமான மாற்றங்களைத் தழுவுவதாய் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இணைய உள்ளடக்கத்தை ஈரான் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

உண்மையையும் தாண்டி தகவல்களை வேகமாக மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதில் இப்போது அதிகக் கவனம் செலுத்தப்படுவதாய்க் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

seithi


 


Post a Comment

0 Comments