Ticker

6/recent/ticker-posts

அடுத்தடுத்து வெடிக்கும் எரிமலை: இந்தோனேசியாவில் பதற்றம்


கிழக்கு இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் அமைந்துள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலை, வெள்ளிக்கிழமை பலமுறை சீற்றத்துடன் வெடித்ததால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எரிமலையிலிருந்து 2.5 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல், எரிமலைப் பொருட்கள் வானில் பீறிட்டுச் சென்றதாக இந்தோனேசிய எரிமலையியல் முகமை தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான வெடிப்புகளைத் தொடர்ந்து, எரிமலை தற்போது இரண்டாவது மிக உயர்ந்த அபாய எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எரிமலையைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் தூரம் தடை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், கனமழை பெய்தால் எரிமலைக் குழம்பு வெள்ளம் (Lahar Flood) ஏற்படும் அபாயம் இருப்பதால், ஆற்றங்கரையோர மக்களுக்குச் சிறப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எரிமலையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மவ்மெரே விமான நிலையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், ஐந்து உள்நாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே எரிமலை 18 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பலைக் கக்கியதால், பாலி அனைத்துலக விமான நிலையத்தில் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

‘பசிபிக் நெருப்பு வளையம்’ (Pacific Ring of Fire) பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, உலகிலேயே அதிக எரிமலை, நில அதிர்வு செயல்பாடுகளைச் சந்திக்கும் நாடுகளில் ஒன்றாகும்.

nambikkai


 


Post a Comment

0 Comments