
கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் போலி பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் புறக்கோட்டை பகுதியில் உள்ள விடுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பிஸ்டல் ரக துப்பாக்கிக்கு ஒத்த போலி துப்பாக்கி ஒன்றை கையில் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jvpnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments