Ticker

6/recent/ticker-posts

Ad Code



பார்லி கஞ்சியை இப்படி செஞ்சு.. தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்...


நீங்கள் உடல் எடையைக் குறைக்க ட்ரை செய்து கொண்டிருக்கிறீர்களா? அதற்காக காலையில் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து வருவதோடு, டயட்டிலும் உள்ளீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் காலை வேளையில் பார்லி கொண்டு கஞ்சி செய்து குடியுங்கள். 

இப்படி பார்லி கஞ்சியை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை வேகமாக குறையும். 

இந்த கஞ்சியை குழந்தைகளும் குடித்து வரலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் இட்லி, தோசை செய்து போரடித்திருந்தால், ஒருமுறை பார்லி கஞ்சியை செய்து குடியுங்கள். இதனால் உடல் வலுவோடு இருக்கும். 

 உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவும் வெஜிடேபிள் பார்லி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? 
கீழே வெஜிடேபிள் பார்லி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள்: 
பார்லி அரிசி பவுடருக்கு... * பார்லி அரிசி - 1 கப் 
* மிளகு - 1/2 டீஸ்பூன் 
* சீரகம் - 1/2 டீஸ்பூன் கஞ்சிக்கு... 
* வெண்ணெய் - 1 டீஸ்பூன் 
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது) 
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது) 
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
* கேரட் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது) 
* பீன்ஸ் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது) 
* தண்ணீர் - 4 டம்ளர் 
* உப்பு - சுவைக்கேற்ப 
* பார்லி அரிசி பவுடர் - 4 ஸ்பூன் 
* கொத்தமல்லி - சிறிது 

செய்முறை 
* முதலில் பார்லியை ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 2 நிமிடம் வறுக்க வேண்டும். 
* பின் அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். 
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். 
* அதன் பின் அதில் கேரட் மற்றும் பீன்ஸை சேர்த்து வதக்க வேண்டும். 
* பின்னர் அதில் 4 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 
* நீரானது நன்கு கொதிக்கத் தொடங்கியதும், அதில் 4 ஸ்பூன் பார்லி அரிசி பவுடரை சேர்த்து கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும். 
* பின் அதை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 
* 10 நிமிடம் கழித்து, அதை இறக்கி கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான பார்லி கஞ்சி தயார்.

boldsky


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments