Ticker

6/recent/ticker-posts

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : அரசாங்கம் அதிரடி தீர்மானம்


கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, ஜனவரி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் தயார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் இதுவரை இடம்பெற்றுள்ள விடயங்கள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள விடயங்கள் குறித்து பெருமளவான தகவல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியினர் பிரதமருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரும் போது, கல்விச் சீர்திருத்தங்களின் உண்மைத் தன்மை மற்றும் யதார்த்தத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க அரசாங்கத்திற்கு முடியுமாக இருக்கும் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

tamilmirror

 


Post a Comment

0 Comments