
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த நாட்டின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமெனி தெரிவித்துள்ளார்.
ஈரான் முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பரவி வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக பொதுமக்கள் முன் கருத்து வெளியிட்ட காமெனெய் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஈரான் அரச தொலைக்காட்சியில் இந்த உரை ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
இஸ்லாமிய குடியரசு
அமெரிக்க ஜனாதிபதியை மகிழ்விப்பதற்காக பொது சொத்துகளை அழிக்க விரும்பும் சில தூண்டுதலாளர்கள் உள்ளனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈரான் மக்கள் அனைத்து எதிரிகளையும் தோற்கடிப்பார்கள் எனவும் ட்ரம்ப் தனது சொந்த நாட்டின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பல்லாயிரக்கணக்கான உயரிய மனிதர்களின் இரத்த தியாகத்தின் மூலம் இஸ்லாமிய குடியரசு அதிகாரத்திற்கு வந்தது எனவும் அழிக்க முயலும் எவரிடமும் இஸ்லாமிய குடியரசு ஒருபோதும் பின்னடைவதில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டால் ஈரானை தாக்குவேன் என டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை மீண்டும் எச்சரித்ததன் பின்னணியில், ஈரானின் ஆன்மீகத் தலைவர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
ஈரானில் போராட்டம்
நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், இந்த உரை ஈரான்–அமெரிக்கா உறவுகளில் மேலும் கடும் பதற்றத்தை உருவாக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஈரானில், போராட்டங்களில் ஈடுபடும் சிலர், ட்ரம்பை “மகிழ்விப்பதற்காக” செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். கலவரக்காரர்கள் அவர்மீதே தங்களது நம்பிக்கையை வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் ஈரான் அரசர் முகம்மத் ரேசா பஹ்லவி போன்ற ‘அகந்தை கொண்ட’ உலகத் தலைவர்களைப் போலவே, டொனால்ட் ட்ரம்பும் இறுதியில் அதிகாரத்திலிருந்து வீழ்வார் என அலி கமெனி கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments