Ticker

6/recent/ticker-posts

உலகக் கிண்ணம் நெருக்கடியில்! - கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு


இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு செல்ல பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து ஆசிய கிரிக்கெட் பேரவையின் முன்னாள் தலைமை நிர்வாகி சையத் அஷ்ரபுல் ஹக் (Syed Ashraful Haque) முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். 
 
இதன்படி இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தமது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் (ICC) பங்களாதேஷ் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 
 
முஸ்தபிசுர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மொஹமட் யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் ஐபிஎல் போட்டிகளை அந்நாட்டில் ஒளிபரப்பத் தடை விதித்துள்ளது. 
 
"இந்திய அரசாங்கம் பங்களாதேஷ் வீரர்களுக்கு 'நாட்டின் தலைவருக்கு (Head-of-state)' வழங்கப்படக்கூடிய அதியுயர் பாதுகாப்பை வழங்க முன்வரும். அவ்வாறு வழங்கப்பட்ட பின், இந்தியாவுக்கு செல்வதா இல்லையா என்பதை பங்களாதேஷ் முடிவு செய்ய வேண்டியிருக்கும்" என சையத் அஷ்ரபுல் ஹக் தெரிவித்துள்ளார். 
 
ஒருவேளை பங்களாதேஷ் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகினால், ஐசிசி மூலம் கிடைக்க வேண்டிய வருமானப் பங்கீட்டை இழக்க நேரிடும் என்றும், இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் (BCCI) நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 
 
போட்டி ஆரம்பிக்க ஒரு மாதமே உள்ள நிலையில், மைதானங்களை மாற்றுவது என்பது மிகவும் கடினமான விடயம் என்றும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் முன்னாள் தலைமை நிர்வாகி சையத் அஷ்ரபுல் ஹக் சுட்டிக்காட்டியுள்ளார்.

hirunews

 


Post a Comment

0 Comments