
அமெரிக்காவில் காதலர்கள் விமானத்தில் திருமணம் செய்துகொண்டது சமூக ஊடகத்தில் பேசப்படுகிறது.
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் (Southwest Airlines) விமானம் ஒன்றில் பயணம் செய்தவாறு அவர்கள் மணம்புரிய முடிவெடுத்தனர்.
மணமகன் விமானத்தின் முன்புறத்தில் ஆவலுடன் காத்திருக்க, திருமண இசை ஒலிக்க மணமகள் விமானத்தின் பின்புறத்திலிருந்து நடந்து வந்தார்.
சக பயணிகள் உற்சாகமாகக் கைதட்ட இருவரும் தங்கள் வாக்குறுதிகளைப் பரிமாறிக்கொண்டனர்.
சிப்பந்தி ஒருவர் விமானத்தின் ஒலிபெருக்கி மூலம் திருமணத்தை நடத்தி வைத்தார். நியூ யார்க் டைம்ஸ் (New York Times) நாளிதழில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டது.
திருமணம் இடையூறு இன்றி நடைபெற பயணிகள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும்படி அறிவிப்பும் செய்யப்பட்டது.
மேலும் கழிப்பறையைப் பயன்படுத்த விரும்பினால் விமானத்தின் பின்புறத்தில் உள்ள கழிப்பறைகளுக்குச் செல்லும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அது வேடிக்கையான வேண்டுகோளாக இருந்தாலும் சற்று எரிச்சல் அடைந்தனர் சில பயணிகள்.
அது அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments