Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-101


அவனை நோக்கி வந்துகொண்டிருந்த அந்தக் கொடூர மிருகத்தைக் கண்டதும் தனது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்பதைப் புரிந்து கொண்ட இர்வின், தனது கையில் இருந்த   ஊன்றுகோலைக் கொண்டு அதனை அடக்கத் தன்னைத்  தயார்படுத்திக் கொண்டான்!

அப்பொழுதுதான் அவன் நினைத்துக் கூடப்பாராத அந்த நிகழ்வு நடந்தது! வனத்தின் நாற்புரங்களிளிருந்தும் விரைந்து வந்த வனவாசிகள் சிலர், அந்தக் கொடூர மிருகத்தைத் துவம்சம் செய்யலாயினர்! மிருகம் தன் உயிரைவிட்டுவிட்டு நிலத்தில் சாய்ந்தபோதுதான் இர்வின் அமைதிப் பெருமூச்சு விட்டான்!

அசடு வழிய நின்றிருந்த இர்வினிடத்தில் அந்த வனவாசிகள் முரட்டுத்தனம் கலந்த புன்னகை ஒன்றை விட்டுவிட்டு, இறந்து கிடந்த மிருகத்தை கூறுபோட்டு, ஆளுக்கொரு துண்டை எடுத்துக் கொண்டவர்களாக அந்த இடத்தை விட்டும் நகர்ந்தனர்!

இர்வினிடத்தில் இப்பொழுது இனம்புரியாத பயமொன்று ஆட்கொண்டுவிட்டது!

வனத்தின் நடுப்பகுதியில் வந்து மாட்டிக்கொண்ட அவன் இப்பொழுது திரும்பிச் செல்வதா அல்லது பயணத்தைத் தொடர்வதா என்பதில் சரியான தீர்மானம் ஒன்றை எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் நிர்க்கதியானான்!

பயணத்தைத் தொடர்ந்தாலும், வந்தவழியே திரும்பிச் சென்றாலும் அவன் ஒரே விதமான ஆபத்தைத்தான் எதிர்கொள்ள வேண்டியவனானான்!

பயணத்தை தொடர்ந்தால் அவன் திரும்பிவரும்போது அவனது  நண்பனோடும் அவர்களது குடும்பத்தவர் களோடும் ஒன்றாக வரலாம்.

அதுதான் அவனுக்கு மிகவும் பாதுகாப்பானது என்பதை உணர்ந்து கொண்ட அவன் தொடர்ந்து ஆற்றின் திசை நோக்கி நடக்கலானான்!

தான் நடந்து கொண்டிருந்தபோது, ஆற்று நீரின் சலலப்பும், ஆந்தைகள் கத்துவதும் அவனது காதுகளில் விழுந்ததால், ஆறு சமீபமாகிவிட்டது என்பதை  உணர்ந்து கொண்ட அவன், கொடிய மிருகங்கள் நடமாடும் பகுதியைக் கடந்து, தான் வந்துவிட்டதை உணர்ந்து மகிழ்ச்சியடைந்தான்.

இன்னும் கொஞ்சதூரம் நடந்தபோது தூரத்தில் வனவாசிகளின் பாடல்களின் ஓசை அவனது காதுகளில் விழுந்தது!

அது செரோக்கியின் கூட்டத்தார் என்பதை இனங்கண்டு கொண்டவனாக அக்கூட்டத்தினரை நோக்கி விரைந்து நடக்கலானான்!

(தொடரும்)

 


Post a Comment

0 Comments