Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-14


சுற்றந்தழால்

குறள் மொழி 44

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

குறள் எண்:524

குறள் மொழியின் பொருள் :

ஒருவன் செல்வம் பெற்றதன் பயன் என்னவென்றால், தன் சுற்றத்தாருடன்: உறவினருடன் கலந்து அவர்களுக்கும் வழங்கி அவர்களையும் ஆதரித்து வாழ்வதே ஆகும்.

நபிமொழி :

ஒருமுறை நபிகளிடம், "நாயகமே! எந்த தாமம் மிகவும் மேலானது? என வினவியதுபோது முடையின சிரமத்தோடு வறுமை நிலையிலும் கூட செய்யப்படும் ஒருவரின் தாமமே. அதுவும் தம் குடும்பத்தாரிலிருந்து உறவினர்களுக்குச் செய்யும், தொடங்கும் தாமமே என்று அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள். அத்துடன் வசதிபடைத்தோர்க்கு மேலும் கடமையாகும் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளார்: அபுஹீரைரா (ரலி)
ஆதாரம்: நூல் - அபுதாவூத்-201.

விருந்தோம்பல்

குறள் மொழி 45

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.

குறள் எண்:86

குறள் மொழியின் பொருள்:

விருந்தினரைக் கண்ணியப்படுத்துதல் உயரிய பண்பு. வந்த விருந்தினரை உபசரித்து விட்டு, இனிவரும் விருந்தினரை உபசரிக்கக் காத்திருப்பவனை வானவாகளும் விரும்பி உபசரிப்பார்கள்.

நபிமொழி :

கண்ணியம் மிக்கது விருந்தோம்பல்! "...... அல்லாஹ்வை (இறைவனை)யும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவா தம் இல்லம் வரும் விருந்தினரைக கண்ணியப்படுத்தட்டும்.
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்)
ஆதாரம்: புகாரி முஸ்லிம்.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments