Ticker

6/recent/ticker-posts

கோவை குறளாசான் தமிழ்ச் செம்மல் முனைவர் அன்வர் பாட்சா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது


தமிழக அரசின் திருக்குறள் திருப்பணிகள் 
திட்டம். கோவை மாவட்டம், 
தமிழ் வளர்ச்சித் துறையின் திருக்குறள் நுண் பயிற்சி 23 ஆவது தொடர் வகுப்பு கோயம்புத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 07-02-2026 ஆம் நாள் காலை பத்து மணிக்கு வழக்கம் போல் இனிதே தொடங்கி நடைபெற்றது.
தமிழ்த் தாய் வாழ்த்துடன், திருக்குறள் தொடர் வகுப்பைப் பயிற்றுநர் குறளாசான், தமிழ்ச் செம்மல், முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் அவருக்கே உரிய பாணியில் வருகை புரிந்த தமிழ்ச் சான்றோர் மனங் கொள்ளும் வகையில் பல்வேறு இலக்கியச் சான்றுகளுடன் திருக்குறள் நுண் பயிற்சி வகுப்பு நடத்தினார்.

 வகுப்பில் சென்னை உலகத் திருக்குறள் உயராய்வு மையத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் பேராசிரியர் திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களும் அவரது வாழ்க்கைத் துணைவர் திருக்குறள் ஆர்வலர் P.சண்முகம் ஐயா அவர்களும் வந்து கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்ற திருக்குறள் வேந்தர் முனைவர் எம்.ஜி.அன்வர் பாட்ஷா அவர்களுக்கு அவரது ஐம்பது ஆண்டுகால இலக்கியப்பணி, தமிழ்ப்பணி, திருக்குறள் பணியைப் பாராட்டி, உலகத் திருக்குறள் மையத்தின் நிறுவனர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் செம்மொழி தமிழ் விருதாளர் திருக்குறள் தூயர் முனைவர் கு. மோகனராசு ஐயா அவர்கள் அளித்த திருக்குறள் வாழ்நாள் சாதனையாளர் விருதினை முனைவர் எம்.ஜி.அன்வர் பாட்சா அவர்களுக்கு தமிழறிஞர்கள் முன்னிலையில் அளித்து மகிழ்ந்தனர்.

வகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பெற்றது



 


Post a Comment

1 Comments

  1. அருமையான பதிவு... மனமார்ந்த வாழ்த்துக்கள்... நெஞ்சார்ந்த நன்றி மா 👍🙏♥️🤝✍️

    ReplyDelete