Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-4


இனியவை நாற்பது .. 7.

அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது.

விளக்கம்: 

அந்தணர்கள் வேதம் ஓதுவதை மறக்காமலிருப்பது இனிது. 
நிறைய உறவினர்களை உடைய ஒருவன் படைக்குத் தலைவனாக இருப்பது இனிது. 
சொல்வது தந்தையே ஆனாலும் அவர் சொல்லும் தவறான ஆலோசனைகளைக்  கேட்டு நடக்காமல் இருப்பது இனிது. 

இனியவை நாற்பது… 8.

ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது.

விளக்கம்: 

போர் வீரர் வலிமையான குதிரையை வைத்திருப்பது இனிது. 
போர்க் களத்தில்  யானைகள் போரிடுவதைக்  காண்பது இனிது. 
அன்புடையவர்கள் சொல்லும் எல்லா நல்லவற்றையும்  கேட்பது மிகவும் இனிது.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments