Ticker

6/recent/ticker-posts

சோதனை போதும் புள்ள!


சோதனை போதும் புள்ள
சோதிப்பவை வேணாம் புள்ள 

காற்றோடு கரையும்
கற்பூரமாகவே என்னுள்ளே 
கரைகின்றாய் நீ கரைகின்றாய்.
கரைந்து கரைந்து 
சுவாசத்தோடு நுழைகின்றாய்
நீ நுழைகின்றாய்.

ஆயுள் ரேகையில் 
சூழ்ந்து கொண்டு
சுடர் ஏற்றிய சூடமாய்
எரிக்கின்றாய் என் 
நெஞ்சத்தை நீ எரிக்கின்றாய்.

இறந்து போக நினைத்தாலும் 
தடுக்கின்றாய் பழமை
நினைவைக் கொண்டு தடுக்கின்றாய்.
இரக்கம் கொண்டு அழைத்த 
நாட்களை உசுப்புகின்றாய் 
மறுபடியும் மறுபடியும்
வடுக்களைக் கீறி விடுகின்றாய் 
நீ கீறி விடுகின்றாய். 

துடித்திடும் 
ஜீவனை வெறுக்கின்றாய் 
துள்ளி வந்த ஆசையைத் துரத்துகின்றாய்.
துணையே நீயென நினைத்தேன்
தூரமாய் விலக்கி விட்டாய் நீ
என்னை விலக்கி விட்டாய் 

ஆர்.எஸ்.கலா

 


Post a Comment

0 Comments