Ticker

6/recent/ticker-posts

நலம் வாழ -மருத்துவப் பகுதி -15


எல்லோருக்கும் உணவு தேவை ஆனால் சிலருக்கு மற்றவர்களை விட அதிகம் தேவை, ஒருவரின் வயது, பாலினம், அளவு, வளரும் தன்மை வேலை இவற்றைப் பொறுத்து ஒருவர் நன்றாக வளர வளர, வேலை செய்ய, நலமாக இருக்க ஊட்ட உணவு தேவையாக உள்ளது. 

உடலுக்கு தேவையான உணவை சரியாக உண்ணாத நமக்கு பல நோய்கள் தோன்றுகின்றது. உலகில் மக்கள் பொதுவாக ஒவ்வொரு வேளையும் குறைந்த செலவில் ஒரு முக்கிய உணவை உண்ணுகிறார்கள். 

இடத்தை பொறுத்து அது அரிசி, தானியம், கோதுமை, உருளை, வாழை என எதுவாகவும் இருக்கலாம் .ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு வேண்டிய உணவு தேவையை முக்கிய உணவு பூர்த்தி செய்கிறது.

ஆனால் இந்த உணவு மட்டும் ஒருவர் நலமாக இருக்க போதாது. பயனுள்ள சில வேறு இணை உணவுகளும் தேவைப்படுகின்றது.

வளரும் குழந்தைகள் கருவுற்ற தாய், தாய்ப்பால் ஊட்டும் தாய்,முதியோர் ஆகியோருக்கு அவை மிக முக்கியம்.

இவ்வாறாக ஒவ்வொரு வரிசையிலும் நாம் தேவையான ஊட்டச்சத்துக்களை குறித்து பார்த்து வருகின்றோம்.

இன்று நாம் பார்க்கப்போவது சோடியம் எனும் தாது உப்பை குறித்து தான்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு 40% சோடியம் உள்ளது. அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் உப்பில் 2300 மில்லி கிராம் சோடியம் உள்ளது .

இது ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சோடியம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
 
இருப்பினும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் அதை குறைத்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

சரி நாம் ஏன் உணவில் சோடியம் உப்பை சேர்க்கிறோம்,ஒருவருடைய உணவில் உப்பை சேர்ப்பது அதாவது சோடியத்தை சேர்ப்பது உடல் செல்களுக்கு வெளியே உள்ள திரவங்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது. உடலில் உள்ள செல்களுக்கு திரவங்களை செலுத்துவதற்கு சோடியம் தேவைப்படுகிறது. எப்படி புரிந்து கொள்வது என்றால் மனிதனின் செல்களில் ஏற்படும் நிலை மாற்றம்,அதாவது சோடியம் குளோரின் இணைந்து மனித உடலில் இருந்து வெளிப்படும் நீர் இழப்பை தடுக்க உதவி செய்கிறது இந்த சோடியம். 

நான் இதனால் இதை எலக்ட்ரோலைட்ஸ் எனவும் சொல்லலாம்.
வயிற்றுப் போக்கின் மூலமாகவும் வாந்தியின் மூலமாகவும் நமது உடலில் நீர் இழப்பு அதிகமாக ஏற்படும் பொழுது தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. 

கோடை காலத்தில் வெப்பநிலை உச்சம் அடையும் பொழுதும் இவ்வாறு ஏற்படுகிறது. இதனால் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும். 

சோடியம் பயன்படுத்தும் பொழுது நீரேற்றம் மற்றும் தசை சுருக்கத்திற்கு வழி வகை செய்கிறது. சோடியம் நிறைந்த திரவங்கள் மற்றும் பழச்சாறுகள் மனித உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இன்னும் மனித மூளையின் சரியான வளர்ச்சிக்கும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், சோடியம் மிக முக்கியமான ஒன்றாகும்.

உடலில் உள்ள சோடியத்தின் அளவுகளில் ஏற்படும் மாற்றம் மூளையில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக குழப்பம் ,தலைசுற்றல் சோம்பல் போன்றவை ஏற்படுகிறது.  சோடியம் பொதுவாக உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது என்ற போதிலும்,சோடியம் சரியான அளவில்எடுக்கும் பொழுது  மனித இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறப்பாக சோடியம் செயல்படும் . 

இறுதியாக ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க போதுமான சோடியம் உடலில் இருப்பது அவசியம்.சோடியம் இதயத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். நரம்பு தூண்டுதல்களை ஒழுங்குப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. சோடியம் நரம்பு சுருக்கங்களை சாதாரணமாக வைத்து மேலும் சரியான ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.
 
சரி இது இதற்கு மட்டும்தான் சோடியம் பயன்படுகிறதா என்றால்,சோடியம் மனித உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதை தவிர மற்ற நோக்கங்களுக்காகவும் பயனுள்ளதாக இருக்கிறது.சோடியத்தின் மிகவும் பொதுவான பயன்பாடு உப்பு வடிவத்தில் உள்ளது. நமது உணவில் சுவையூட்டும் மிக முக்கிய பொருளாக விளங்குகிறது" உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்பதைப் போல உப்பு என்பது நமது உணவில் மிக முக்கிய ஒரு பொருளாக உள்ளது.

சரி இதை அதிக அளவில் பயன்படுத்தினால் என்னவாகும் என்பதை பார்க்கலாம்
.
சோடியத்தை அதிகமாக உட்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த அளவு அதிகரிக்கும்.எனவே சோடியத்தின் அளவை அதிகரிக்கும் பொழுது இருதய செயலிழப்பு சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல்,ஈரல் அழற்சி போன்றவர்களுக்கு மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

சோடியம் உப்பைத் தவிர வேறு ஏவற்றில் உள்ளது என்பதை பார்க்கலாம்

ஆப்பிள், முட்டைகோஸ் முட்டையின் மஞ்சள் கரு பருப்பு வகைகள் வாழைப்பழங்கள் கேரட் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா, டர்னிப்,  காய்கறிகள் உலர்ந்த பட்டாணி இவற்றில் அதிகமாக உள்ளது.

பதப்படுத்தப்பட்ட பாலாடை,கட்டி,இறைச்சி,ஊறுகாய் போன்றவற்றில் அதிகமாக காணப்படுகிறது.

சரி நாம் நிறைவுக்கு வருவோம்.மனித உடலின் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பில் இது மிக முக்கிய பங்காற்றி வருகிறது.இந்த வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது உடலில் இருந்து உப்பு மற்றும் நீர் இழப்பு காரணமாக நமது உடல் மோசம் அடைகிறது.எனவே தேவையான எலக்ட்ரோலைட்ஸ்கள் இழப்பின் மூலமாக சன் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படுகிறது.எனவே நாம் அந்த நேரங்களில் தண்ணீரும் உப்பு மற்றும் சர்க்கரை நீர் எடுக்கும் பொழுது இந்த அதிக வெப்ப தாக்குதலில் இருந்து நாம் பாதுகாப்பு பெறலாம். 

எனவே நமது உடலில் சோடியம் என்பது மிக முக்கியமான பங்காற்றி வருகிறது.

 அடுத்த வாரம் வேறு தாது உப்புடன்  உங்களை  சந்திக்க வருகிறேன்.

என்றும் வேட்டை வாசகர்களுக்காக
உங்களுடன்

டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).


தொகுப்பு :
உங்கள் குறள் யோகி, 
தமிழ்ச் செம்மல், 
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.


 


Post a Comment

0 Comments