Ticker

6/recent/ticker-posts

இனி செல்லப் பிராணிகளால் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும்... அசத்திய சீன விஞ்ஞானிகள்!


"எனக்கு பசிக்கிறது" - இப்படி உங்கள் செல்ல நாய்க்குட்டியிடமிருந்து உங்கள் போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்ப முடியுமா? சாத்தியம் என்கிறது சீனா.

தகவல் தொழில்நுட்பம், ஏ.ஐ. என அனைத்துத் துறைகளிலும் புதுப்புது கருவிகளை உருவாக்கி சாதனைகளைப் படைத்து வரும் சீனா, தொழில்நுட்ப அறிவியல் நகரமாக விளங்கும் விகு (Wuhu) நகரில் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளது. அதில், நாயின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு பட்டை மூலம், சேகரிக்கப்படும் நாயின் ஒவ்வொரு சத்தமும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அந்த தரவுகள் மூலம் நாய்க்கு பசிக்கிறதா அல்லது உரிமையாளரை தேடுகிறதா என்பது தெரியவரும்.

மேலும் அந்த குறிப்பு, உரிமையாளரின் செல்போனுக்கு மெசேஜாக வரும் வகையில் புதிய கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, நாய்களின் 5 லட்சத்துக்கும் அதிகமான நடத்தைகள், சத்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முழுவதும் பரிசோனை முடிந்த பிறகு, இந்தக் கருவி விரைவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. “எனக்கு பசிக்கிறது... என்னை வெளியே கூட்டிட்டு போ...” என இனி உங்க பப்பி, டைகர், டாமி கிட்ட இருந்து உங்கள் போனுக்கு மெசேஜ் வரலாம்.

news18


 


Post a Comment

0 Comments