
அரிசி அல்லது சிறுதானியங்களை அதிக தண்ணீரில் வேகவைத்து, களிம்பு பதத்திற்கு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் எளிதில் செரிமானமாகும் பாரம்பரிய உணவு தான் கஞ்சி.
இது இந்திய வீடுகளில் ஒரு பொதுவான காலை உணவு வகையாகும். அந்த வகையில் ஓட்ஸ் வைத்து கஞ்சி செய்தல் தற்போது வழக்கமாகி விட்டது.
இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில் தினமும் ஓட்ஸ் கஞ்சியை சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மை என்பதை பார்க்கலாம்.
நன்மைகள்
செரிமானத்தை மேம்படுத்துகிறது
ஓட்ஸ் கஞ்சியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கலையும் நீக்குகிறது. ஓட்ஸ் கஞ்சியில் உள்ள நார்ச்சத்து, குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு ப்ரீபயாட்டிக்காகச் செயல்படுகிறது.
உடல் எடையைக் கட்டுப்படுதுகிறது
ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைந்ததாக உணரச் செய்து, உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும் பசியைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், ஓட்ஸ் உங்கள் மெதுவான வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது.
இதயத்திற்கு ஆரோக்கியமானது
ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது, இது இதய ஆரோக்கியத்திற்குப் பங்களிக்கிறது. இதில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கிறது.
இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது
ஓட்ஸ் சுமார் 40 என்ற கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவுத் தேர்வாக அமைகிறது. மேலும், இது இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்கவும் உதவுகிறது.
manithan

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments