Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-25


குறள் 126;

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

உறுப்புகளை ஆமை ஒடுக்கிவாழ்தல் போல
புலனடக்கம் மாந்தர்க்(கு) அரண்.

குறள் 127:

பாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

நாவடக்கம் சொல்லடக்கம் இல்லையெனில் சொற்குற்றம்
ஏற்படுத்தும் ஆறாத் துயர்.

குறன் 128:

ஒன்றானுத் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

சொன்னசொல் ஒன்றிலே தீயசொல் வந்தாலும்
நன்சொல் அனைத்துமே பாழ்.

குறன் 129:

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

தீப்புண்ணோ ஆறிவிடும் தீச்சொல்லால்
ஏற்பட்ட புண்ணாறா தே.

குறள் 130:

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

படித்தும் அடக்கமுடன் கோபமின்றி வாழ்வோர்
வழிபார்த்து மிற்கும் அறம்

(தொடரும்) 


 


Post a Comment

0 Comments