
அரசி மந்திரியின் முகம் நோக்கினார். மந்திரி அரண்மனை வைத்தியரைப் பார்த்தார். மூவரும் பேசிக் கொள்ளவில்லை.
அப்போது மீண்டும் குமரனே எழுந்து கூறினான் "அரசே இன்னும் ஓர் வேண்டுகோள் தங்களிடம் கூற விரும்புகிறேன்.
அவை பெரிதாக ஒன்றுமில்லை நம் ராஜகுமாரியின் தோழிகளான மீனா பானு இவர்கள் இருவரும் ராஜகுமாரியை மீட்டிட ரொம்ப உதவி பண்ணி இருந்தார்கள். அவர்களுக்கும் தாங்கள் அன்புகூர்ந்து பரிசுப் பொதிகள் கொடுத்தால் அவர்களும் மகிழ்ச்சி கொள்வார்கள் அரசே" என்றான்.
ராஜகுமாரி கூறினாள் "கன்டிப்பாக மருத்துவரே அவர்கள் என் உயிர்த்தோழிகள் அதை நானே இப்போதே கொடுக்கிறேன் மருத்துவரே" என்றவள்,அழைத்தார் "மீனா பானு என் அருகே வாருங்கள்" என்றவுடன் மீனாவும் பானுவும் மகிழ்ச்சியோடு அருகே போனார்கள்.
இருவரையும் ஆறத் தழுவி கன்னம் கிள்ளிச் சிரித்து விட்டு ராஜகுமாரி கேட்டார் "அதிகம் சிரமம் கொடுத்தேனா? பானு நீ கூறுமடி" என்று .
"இல்லை ராஜகுமாரி அப்படி ஒன்றுமில்லை" என்று கூறி பானு புன்னகைத்தாள்.
"மீனா நீ கூறும் நான் ஏதேனும் குரும்புத்தனம் செய்தேனா?,சும்மா சொல்லடி" என்று தன் பக்கம் இழுத்தார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பெரும் புன்னகையோடு இருந்தார் மகாராணி.தன்' மகளின் கேலிப் பேச்சு ஒலி கேட்டு எத்தனை மாதங்களாச்சு இந்த அரண்மனையில்' என்று நினைத்து சற்றுக் கண்ணீரையும் இறக்கி விட்டார். யாரும் அறியாதவாறு விரல் கொண்டு துடைத்தும் கொண்டார்.
"சரி, சரி நான் ஏதேனும் தவறு செய்து இருந்தால் மன்னிக்கவும் என் ஆசைத் தோழியரே"என்று ராஜகுமாரி கூறவே மீனா பானு இருவரும் பதறிப் போய்க் கரத்தைத் தொட்டார்கள்.ராஜகுமாரி தன் கையை விடுவித்துக் கொண்டு தான் அணிந்திருந்த விலை உயர்வான பொன் நகைகளில் இரண்டைக் கழட்டி மீனா பானு இருவருக்கும் அணிவித்தார்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments