
நேற்று (ஜனவரி 31) காசா மீது இஸ்ரேல் நடத்திய கொடுரமான தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தெரிவித்தன.
இது அக்டோபர் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக அதிக உயிரிழப்புகளில் ஒன்றாகும்.
இந்தத் தாக்குதல்கள் காசா முழுவதும் பல இடங்களில் நடந்துள்ளது. கான் யூனிஸில் உள்ள முகாமில் நடந்த தாக்குதல் தீ விபத்தை ஏற்படுத்தியதாகவும், இதில் ஒரு தந்தை, அவரது மூன்று குழந்தைகள், மூன்று பேரக்குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் நாசர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
காசா நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் மீதான தாக்குதலில் மூன்று குழந்தைகள், வயது முதிர்ந்த பாட்டி உயிரிழந்தார்.
அதேபோல காவல் நிலையம் மீதான தாக்குதலில் நான்கு பெண் காவலர்கள், பொதுமக்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டதாக ஷிஃபா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஜபாலியா அகதிகள் முகாமுக்கு கிழக்குப் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஷிஃபா மருத்துவமனை கூறியது.
காசாவின் தென்கோடி நகரமான ரஃபாவில் எகிப்துடனான எல்லைப்பகுதி நாளை திறக்கப்படவுள்ள நிலையில் இந்த மோசமான தாக்குதல்கள் நடந்துள்ளன. பெரும்பாலான மருத்துவ உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்ட காசாவுக்கு வெளியே சிகிச்சை தேவைப்படும் பாலஸ்தீனியர்கள் ரஃபாவை ஒரு உயிர்நாடியாக பார்க்கின்றனர்.
போர்நிறுத்தத்தின் நடுநிலை நாடான எகிப்து, தனது அறிக்கையில் இஸ்ரேலியத் தாக்குதல்களை மிகக் கடுமையாக கண்டித்ததுடன், இந்த தாக்குதல்கள் போர்நிறுத்தத்தின் அரசியல் போக்கிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கின்றன என்றும் எச்சரித்தது.
இஸ்ரேலின் தாக்குதல்களை "மீண்டும் ஒரு அப்பட்டமான போர் நிறுத்த அத்துமீறல்" என்று ஹமாஸ் அழைத்ததுடன், இந்தத் தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலை வலியுறுத்துமாறு அமெரிக்காவையும் மற்ற மத்தியஸ்த நாடுகளையும் கேட்டுக்கொண்டது.
போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலியத் தாக்குதல்களில் இதுவரை 520 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments