
இனியவை நாற்பது-9.
தங்கண் அமர்புடையார் தாம்வாழ்தல் முன்னினிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கையர் ஆகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது.
விளக்கம்:
நம்முடன் அன்பாக இருப்பவர்களுடன் சேர்ந்து வாழ்வது இனிது.
பரந்து விரிந்திருக்கும் வானத்தில் முழு நிலவின் பேரழகைக் காண்பது இனிது.
தப்புத் தண்டா எதுவும் செய்யாமல் எல்லோரிடமும் கருணையோடு இருந்து அன்பு பாராட்டி வாழ்வது மிகவும் இனிது.
இனியவை நாற்பது-10.
கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்(பு) இலாதவரை அஞ்சி அகறல்
எனைமாண்பும் தான்இனிது நன்கு.
விளக்கம்:
கடன் வாங்கி வாழாமல் இருப்பது இனிது.
பண்பற்ற பெண்களிடமிருந்து விலகி விடுதல் இனிது.
கெடுதல் நினைப்பவர்களிடமிருந்து விலகி விடுதல் இனிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments