
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
அந்தவகையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த டி20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணி ஏற்கனவே டி20 தொடரை இழந்த வேளையில் நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 215 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணியால் 165 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று இந்திய அணியை வீழ்த்தி பெற்ற வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது அணியாக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளது. அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்து அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் :
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியை இந்திய மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அணியாக தென்னாப்பிரிக்கா அணி (51 ரன்கள்) முதலிடத்தில் இருக்கும் வேளையில் அவர்கள் அடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இரண்டாவது அணியாக நியூசிலாந்து அணி சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments