Ticker

6/recent/ticker-posts

போதைப்பொருள் பயன்படுத்தும் பேருந்து சாரதிகள்: பேருந்த உரிமையாளர்களுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை


போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்கள் சாரதிகளாக பணியமர்த்தப்படுவதாக உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பேருந்துகளின் வாகன அனுமதிப் பத்திரங்கள் உடனடியாக இரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான சந்தர்ப்பத்திலும் போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளை சேவையில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, அதிக எண்ணிக்கையிலான பேருந்து சாரதிகள் போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

lankatruth


 


Post a Comment

0 Comments