Ticker

6/recent/ticker-posts

மத்திய அமைச்சரை துரோகி என்றழைத்த ராகுல் காந்தி – நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு


மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.

முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே எழுதியுள்ள வெளியிடப்படாத புத்தகத்தின் பகுதிகளைக் குறிப்பிட்டு மக்களவையில் பேசுவதற்கு ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன் உட்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மகர் திவார் நுழைவாயிலில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ராகுல் காந்தியும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது, காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு சென்ற எம்.பி.,யும், மத்திய ரயில்வே இணை அமைச்சருமான ரவ்நீத் சிங் பிட்டூ அங்குவந்தார்.

அவரைப் பார்த்து "துரோகி நண்பா" என்று ராகுல் காந்தி அழைத்தார். அதற்கு ராகுல் காந்தியை பார்த்து, நீங்கள் "தேசத்திற்கு எதிரி" என்று ரவ்நீத் சிங் பதில் அளித்தார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

news18


 


Post a Comment

0 Comments