Ticker

6/recent/ticker-posts

Ad Code



நபி (ஸல்) அவர்களின் உலகப்பற்றற்ற தன்மை!


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு
ஈச்சம் பாயின் மீது படுத்திருந்து எழுந்தார்கள், அப்போது அவர்களது மேனியில் அதன் சுவடு பதிந்திருப்பதைக் கண்ட நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காக ஒரு பஞ்சு விரிப்பை தயார் செய்து தரட்டுமா? எனக் கூறினோம், இதனைக் கேட்ட அவர்கள் எனக்கும் துன்யாவுக்கும் (உலகத்திற்கும்) என்ன இருக்கிறது? துன்யாவில் எனது நிலமை ஒரு பிரயாணியை ஒத்ததாகும், பிரயாணம் செய்பவன் இளைப்பாறுவதற்காக வேண்டி மரத்தினடியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து(தங்கி) விட்டு,(பிரயாணத்தை தொடர்வதற்காக) பின்பு அம்மரத்தை விட்டு சென்று விடுவான் என்றார்கள். (திர்மிதி)




 



Post a Comment

0 Comments