Ticker

6/recent/ticker-posts

என்னோட வாழ்க்கையிலேயே நான் இப்படி பயப்பட்டது இல்ல.. நேபாள் அணி குறித்து – ஜாஸ் பட்லர் பேச்சு


நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாள் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேபாள் அணியின் போராட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நேபாள் அணியானது 180 ரன்கள் அடித்து வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றது.

இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதி நேரத்தில் சாம் கரனின் பவுலிங்கால் தப்பித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் நேபாள் வீரர்கள் விளையாடிய விதம் தனக்கு பயம் அளிக்கும் வகையில் அமைந்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : எனது கிரிக்கெட் கரியரில் இதுபோன்று நான் தோல்வியை நினைத்து ஒருபோதும் அஞ்சியது கிடையாது. இந்த போட்டியில் நாம் தோற்றால் எவ்வளவு அவமானப்படுவோம் என்று கேப்டன் ஹாரி புரூக் என்னிடம் வெந்து பேசினார். சிறிய அணியாக இருந்தாலும் நேபாள் இவ்வளவு சவாலான ஆட்டத்தை விளையாடியதுக்கு வாழ்த்துக்கள் என்று ஜாஸ் பட்லர் கூறினார்.

அவர் கூறியது போன்றே இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் நேபாள் அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கி நகர்ந்த வேளையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் சாம் கரனின் அற்புதமான பந்துவீச்சு அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தது குறிப்பிடத்தக்கது.

crictamil


 


Post a Comment

0 Comments